தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன்
இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தி குண்டு பாந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் சரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவரகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும் மீனவர்களின் நலனுக்காகவும், அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் அதிமுக தொடர்ந்து போராடும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.