தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!
ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதி காவல் துறை மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்தும் கடமைகளி்ல ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் மற்றும் வட மாகாணங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்க நீக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை 2 மணிக்கு குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன