தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுவதோடு, இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.