Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உத்வேகம் பெறும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்பெற்று காணப்படுவதாகவும், அது மேலும் வலுவடைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இன்றைய தினம் சுதந்திர தினத்தை கொண்டாடும் அந்நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …