ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்
ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது.
இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கியுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதனைப் பெறுவதற்கு வசதியாகப் போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் ஒருவரை அவரது வீட்டிலிருந்து வங்கிக்கு அழைத்துக்கொண்டு, மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு கிராமசேவகருடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவம் ஓய்வூதியம் பெறுவோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்!
-
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!
-
3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு!
-
கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




