கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் நிலையில் சினேகா என்ற 28 வயது பிஎச்.டி மாணவி மட்டும் தன்னுடைய புரோட்டா கடைக்கு செல்கிறார்.
ஆம், காலையில் இவர் ஒரு பிஎச்டி மாணவி. மாலையில் ஒரு புரோட்டா மாஸ்டர். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஒரு தார்ப்பாயின் அடியில் தான் இவரது கடை. ஸ்டவ், சிலிண்டர், மற்றும் பாத்திரங்களுடன் செல்லும் இவர் சரியாக மாலை 6 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை தனது புரோட்டா கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஆலு புரோட்டா ஃபேமஸ்
இதன்பின்னர் கடையை முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு செல்லும் இவர் அதன் பின்னர் தனது பி.எச்.டி படிப்புக்கு குறிப்பெடுக்கின்றார். மகாராஷ்டிராவை சேர்ந்த சினேகா கேரளா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஃபார்மேட்டிக்ஸ் என்ற பிரிவில் பிஎச்டி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.