Sunday , September 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு

போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு

போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் போரின்போது கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் போரில் தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என சுமார் 30 பேருக்கான செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.

அமெரிக்காவின் நிதி உதவியுடன், கண்டி மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தினால் இந்த உதவித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன உள்ளிட்ட படை பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …