சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்
ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது.
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற பேரினவாத அமைப்புக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்ற சில சிங்கள அரசியல்வாதிகளும் போர்க்கொடி உயர்த்தினர்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மனித உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின் இறுதியில் அந்த மனு உச்சநீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.