மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும்
தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் இன மத பேதம் பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மண்ணை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பல தேவைகள், குறைபாடுகளையும் வெற்றி கொள்வதற்காக, கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்ப துயரங்களை அர்ப்பணிப்புச் செய்த மக்கள் எழுக தமிழ் பேரணிக்கு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.