பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதி குருதேவ்சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல் இன்று காலை காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரோன்மணி அகாலிதள கட்சியில் முத்த தலைவராக இருந்த 85 வயதான குருதேவ்சிங் பாதல் இதய நோய் காரணமாக இன்று காலை லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

குருதேவ்சிங் பாதல் இதற்கு முன்னர் பாஞ்க்ரைன் மற்றும் ஜைடொ ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மறைந்த பாதலுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

குருதேவ்சிங் பாதலின் மறைவுக்கு அம்மாநில முன்னாள் முதல்மந்திரி பிரகாஷ்சிங் பாதல் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *