தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.

அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அண்மைய காலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *