Tag: இலங்கை ரூபா

வலுப்பெற்றது இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 […]

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.