நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். …
Read More »ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது. இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read More »பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து
இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் தேவையை அமெரிக்கா நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டியதற்காக அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி …
Read More »ட்ரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு
வெள்ளை இனவாத அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கூறி அமெரிக்காவின் வர்த்தகக் குழுக்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனால், அவர் அமைத்திருந்த இரு முக்கிய தொழில் கூட்டமைப்புகளைக் கலைக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் நடந்த வன்முறைகளுக்கு வெள்ளை இனவாத அமைப்புகள், அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஆகிய இரு தரப்புமே காரணம் என ட்ரம்ப் …
Read More »இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்
அமெரிக்காவில் வெள்ளை இனவாதத்தை ஆதரிப்போருக்கும், நாஜி கருத்துகளைக் கடைப்பிடிப்போருக்கும் அந்நாட்டு முன்னாள் போர் வீரர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் சுக்லின் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் ட்ரம்ப் தொடர்பாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. தாம் கூறியிருப்பது தமது சொந்தக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார். வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கும் நாம் அமைதியாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணியில் ஒரு பெண் …
Read More »பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி …
Read More »ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவத்துடன் முஸ்லிம் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு வெளியான செய்தி …
Read More »நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம்
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலை 9.22 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து 10.06 மணிக்கு மேற்கு நேபாளின் ஸ்வன்ரா பகுதிக்கு அருகில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி …
Read More »வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. …
Read More »ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்
ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் ஸ்ரீலங்காவிற்கு மற்றுமொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பயணம் மேற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், பீற்றர் ரொஸ்கம் தலைமையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழு கடந்த 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டது. இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்ததுடன், …
Read More »