கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் […]





