பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக செய்திகள் செல்லாத நிலையே நீடித்தது. வாட்ஸ்-அப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க தொடங்கினர். சர்வர் பிரச்சினை காரணமாகவே வாட்ஸ்-அப் செயலி செயல்பாட்டில் பிரச்சினை நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் செயலியில் செய்திகள் மட்டும் நகர்வின்றி காணப்பட்டது. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வாட்ஸ்-அப் […]





