குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரட்னத்திற்கு ஸ்ரீலங்கா பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வருகைதந்ததுடன், வீசா ஜனவரி மாதம் 31 ஆம் திகதி காலவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் மீது குற்றஞசாட்டப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனவரி முதலாம் திகதி கைதுசெய்யப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31 அம் திகதி ஒராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அனுராதபுர சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் பிராஜாவுரிமையை வழங்கும் பட்சத்தில் அவுஸ்திரேலிய பிராவுரிமையை தாம் கைவிடுவதற்கும் குமார் குணரத்னம் விரும்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு தற்போது ஸ்ரீலங்காவின் பிராஜவுரிமை வழங்கப்பட்டுள்ளது.