Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார்

இலங்கை ஜனநாயக பாதையில் இருந்து விலகி தற்போது மெதுவாக இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சுமார் 200 வருடகாலமாக மின்சாரம் இன்றி அவதிப்பட்ட லுணுகலை பார்க் 50 ஏக்கர் தனியார் தோட்டத்திற்கான மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் இந்தமின் விநியோகம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அரவிந்தகுமார், நாடு சிவில் நிர்வாகஅமைப்பில் இருந்து சிறிது சிறிதாக தடம்மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் இராணுவத்தினர் பங்கேற்று நேர்முகத் தேர்வு ஒன்றை நடத்தியமையின் ஊடாக இந்த நிலைமைய அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரச நிறுவனங்கள் பலவற்றின் முன்னாள் மற்றும் இன்நாள் இராணுவ அதிகாரிகள் பலர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனூடாக நாடு இராணுவ மயமாக்களை நோக்கி நகர்வதை ஊகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

இந்த மூலம் இலங்கை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் சிறுபான்iமியனர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv