யாழ். பொம்மை வெளியில் ஆயுதங்கள் மீட்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். – பொம்மைவெளிப் பகுதியில், உரப் பையில் கட்டபட்ட நிலையில், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

10 பழைய ரி.56 ரக துப்பாக்கிகள், 6 எம்.எம் மோட்டார் குண்டுகள் ரவைகள், கைக்குண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு, இனந்தெரியாத நபர்களினால் குறித்த இடத்தில் போடப்பட்டுள்ளன.

இன்று (26) காலை அப் பகுதி மக்கள் அநாமதேய முறையில் பொதி ஒன்று இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமாகும்.
ஆகையினால் மக்களிடையே பதற்றத்தனை ஏற்படுத்தும் முகமாக இதுபோன்று ஆயுதங்கள் போடப்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *