தமிழர்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசு

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் தினத்தில் அரச நிகழ்வு ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளமை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க முடியும் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் வெசாக் கூடுகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றமை சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் வெசாக் கூடுகளை அமைத்து வருகின்றமை மற்றும் ஜனாதிபதியின் முல்லைத்தீவிற்கான விஜயம் தொடர்பாக யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *