தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இல்லை : கருணா அம்மான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நல்லாட்சியிடம் கூறி நிறுத்திக் காட்டுங்கள் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சவால் விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் அமைப்பதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்து அதனை அமுல்படுத்தினோம். ஆனால் இந்த நல்லாட்சியில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடியுமானால் இந்த நிர்மாணப் பணிகளை நிறுத்திக் காட்ட வேண்டும் என்றார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *