சாகலவுடனான கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிட்ட வைத்தியர் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அமைச்சர் சாகல ரட்ணாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் மாலை 4 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பை வைவிடுவதாக அறிவித்துள்ளது.

மருத்துவ பீடத்தின் செயற்பாட்டாளர் சங்கத்தின் செயற்பாட்டாளரான ரயன் ஜயலத்தை கைதுசெய்வதற்கு அரசு முன்னெடுத்த நடவடிக்கையை கண்டித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில், அமைச்சர் சாலக ரட்ணாயக்கவுடனான கலந்துரையாடலில் பின்னர் கூடிய வைத்தியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய தினம் 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *