Friday , November 15 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.ஆம் திகதி தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகளும், பாதுகாப்பு தரப்பினரும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, தமது சொந்த நிலங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்காக மிகுந்த நம்பிக்கையுடனும் ஆவலுடனும் காத்திருந்தனர்.

எனினும் அவர்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 31 ஆம் திகதி முதல் 84 குடும்பங்கள் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்கள் சகிதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தானும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், விமானப்படை அதிகாரிகள் சகிதம் பொதுமக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.

குறித்த காணிகள் விமானப்படை தளத்திற்குள்ளோ, வனபரிபாலன திணைக்களத்திற்குள்ளோ உள்ளடங்காத படியினால் அவற்றை உடனடியாக விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …