விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்தும் தட்டுப்பாடு குறித்தும் குழப்பமடைய வேண்டியதில்லை.
உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளையில் நடுகை செய்யலாம். உற்பத்திச் செலவு குறைவு. இந்த முறையில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்கள பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவ துடன் 50 கிலோ விதை வெங்காயம் 20 ஆயிரம் ரூபா வரை விலை போகின்றது.
காலபோக வெங்காயப் பயிர்செய்கை தொடர்பாக விவசாய பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் பெரும்போக வெங்காயப் பயிர்செய்கைக்கான விதை வெங்காயத்துக்கு மாற்றீடு உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து வெங்காயத்தை செய்கை பண்ணுவதே.
உண்மை வெங்காய விதையை பயன்படுத்தும்போது உற்பத்திச் செலவு மிகக்குறைவு. அதில் நோய்த்தாக்கமும் குறைவாக இருக்கும். அதன் மூலம் கூடிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.