இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என அவர்
நேற்றைய தினம் பியமகவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிர்ந்தர சமாதானத்தை பாதுகாக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டுமெனவும், எனினும் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கூட்டு எதிர்க்கட்சி புதிய யாப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இல்லாது செய்யப்படுமென மக்களிடையே தவறான கருத்தினை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.