வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார்.
கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார்.
அதன் பின்னர் குடும்பத்தின் சுகதுக்கங்களைக் கேட்டறிவதற்காக வவுனியாவில் உள்ள வித்தியாவின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டுக்கும் ஜனாதிபதி சென்றார்.
வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர்கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.