சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்யாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் ஜூன் மாதம் செல்ல உள்ளார்.
சிறப்பு விருந்தினராக..
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாவது: வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் சர்வதேசப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். மோடியின் ரஷ்யப் பயணம் குறித்த மற்ற விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அவை இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.