Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் எல்லை நிர்­ண­யம் மற்­றும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

கடந்த நவம்­பர் மாதம் 2ஆம் திகதி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வால் வெளி­யிட்­டப்­பட்ட அர­சி­தழை இல்­லாது செய்ய வேண்­டும் என்று கோரியே இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அம்­ப­க­முவ பிர­தேச சபை முன்­னாள் உறுப்­பி­னர் விதா­ன­க­மகே நந்­த­ராஜா மனு­வைத் தாக்­கல் செய்­தார்.

உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபை­கள் அமைச்­சர் பைசர் முஸ்­தபா, அமைச்­சின் செய­லர், பொது நிர்­வாக மற்­றும் முகா­மைத்­து­வம் அமைச்­சர் ரஞ்­ஜித் மத்­தும பண்­டார, தேர்­தல்­கள் ஆணைக் குழு­வின் உறுப்­பி­னர்­கள், சட்­டமா அதி­பர் உட்­பட 8 பேர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர்.

“நுவ­ரெ­லியா மாவட்­டத்­தின் அம்­ப­க­முவ பிர­தேச செய­லர் பிரி­வின் புதிய எல்லை நிர்­ண­யத்­தால் பொது­மக்­க­ளுக்­கும், பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. சிவ­னொ­ளி­பாத மலை உள்­ள­டங்­கும் பிரி­வில் சிங்­க­ளம், பௌத்­தம் தொடர்­பில் அடிப்­ப­டைப் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. இந்த எல்லை நிர்­ண­யம் மத நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாத­க­மாக அமைந்­துள்­ளது. நவம்­பர் மாதம் 2ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழை இல்­லாது செய்ய வேண்­டும்.”- என்று அவர் தனது மனு­வில் கோரி­யுள்­ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …