Monday , October 20 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / “காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும்” ப.சிதம்பரம் கோரிக்கை; பா.ஜனதா கண்டனம்

“காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும்” ப.சிதம்பரம் கோரிக்கை; பா.ஜனதா கண்டனம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘காஷ்மீரில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதாவது, தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அவர்களுடன் நான் உரையாடியபோது, பெரும்பாலானோர் சுயாட்சியை விரும்புவதை உணர்ந்தேன். நானும் கூட அதையே விரும்புகிறேன்’ என்று கூறினார்.

இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

பிரிவினைவாதிகளுக்கு ப.சிதம்பரம் ஆதரவு அளிப்பது, அதிர்ச்சிகரமாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது.

அதே சமயத்தில், அவரது தலைவர், நேரு பல்கலைக்கழகத்தில் தேசவிரோத கோஷம் எழுப்பியவர்களுக்கு ஆதரவு அளித்தவர் என்பதால், இது எங்களுக்கு வியப்பு அளிக்கவில்லை.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …