பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!
கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் பிரான்ஸ் அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி சாலை சினிமாக்கள் மற்றும் அத்தியாவசிய சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
கொடிய கொரோனா வைரஸால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்ததை அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்ற பொது இடங்களுக்கும் தடைவிதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி உணவகங்கள், கடைகள், சினிமாக்கள், இரவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டி சாலைகள் உட்பட பிரான்ஸ் வாழ்க்கைக்கு அவசியமில்லாத அனைத்து இடங்களும் மூடப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் கூறினார்.
இந்த வைரஸை ‘ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி’ என்று விவரித்த அவர், இதில் அத்தியாவசியமானவை தவிர அனைத்து வணிகங்களும் மூடப்பட்டும் என தெரிவித்தார்.
“சந்தைகள் மற்றும் உணவு கடைகள், மருந்தகங்கள், எரிவாயு நிலையங்கள், வங்கிகள், செய்தித்தாள் மற்றும் புகையிலை கடைகள் திறந்திருக்கும்” என்று பிலிப் கூறினார். “வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்கும், ஆனால் மத விழாக்கள் மற்றும் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படும்.”
சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,661 லிருந்து 4,499 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 12லிருந்து தற்போது 91 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!
-
மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?
-
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
-
யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!
-
காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!
-
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
-
கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
-
நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
பயனுள்ள இணைப்புகள் இங்கே