Thursday , January 23 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

இந்தியாவின் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு காதலனுடன் சென்ற இளம்பெண்ணை ஓடும் பேருந்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் இரும்புத் தடியால் அடித்து பேருந்திலிருந்து தூக்கி வீசியெறியப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்ற 4 நான்கு பேரையும் தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பில் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடைசிகட்டமாக இன்று அதிகாலை மேல்முறையீடு செய்யப்பட்டபோது உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து இன்று காலை திகார் சிறையில் குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்சய் குமார், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான்கு பேரின் உடல் நலம் சோதிக்கப்பட்டு தூக்கில் இடுவதற்கான நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சான்று அளித்தனர். இதனையடுத்து தூக்குப் போடும் நபரான பவன் வந்து சேர அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டும் சிறைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி சரியாக 5.30 மணிக்கு 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரை மணி நேரம் கழித்து உடல்கள் இறக்கி விடப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொடிய குற்றவாளிகள் நால்வரும் உயிரிழந்த செய்தி கேட்டு வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை குற்றச்செயல் நடைபெற்ற 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv