Sunday , May 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி

அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி

அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை

நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என ஜனாதிபதி அதிகாரத்தை தாரை வார்த்தவன் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களாலும் சில நீதித்துறை நிறுவனங்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் நியமனம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் பிரதான நிறுவனங்களின் அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டே குறித்த நியமனம் மேங்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிச்துறைச் செயற்பாடுகள் மிகவும் தூய்மையாகவும், வெளிப்படைத்தன்மையானதாகவும் இடம்பெற வேண்டுமென்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுபவராகவும் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களின் ஒரு பகுதியை நாடாளுமன்றத்திற்கும் ஏனைய சுயாதீன நிறுவனங்களுக்கும் ஒப்படைத்த ஜனாதிபதி என்ற வகையில் தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தீர்மானங்களை எடுக்க தயாரில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் தீர்மானங்கள் எடுக்கும் போது அந்த துறைகளிலுள்ள நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடியே மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற கட்டமைப்பில் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடையும்போது பெரும்பாலானவை விவாதங்களுடன் நின்றுவிடுவதாகவும், அதற்கான தீர்வுகள் கிடைப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்குகள் தாமதமடைதல் போன்ற பிரச்சசினைகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறையிலுள்ள அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …