Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / லங்கா சதொச விற்பனை நிலையங்கள் : ஜனாதிபதி திறந்து வைப்பு

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் : ஜனாதிபதி திறந்து வைப்பு

அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்திலான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதற்கமைய, முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொஹவல நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கிணைவாக இன்று நாடு பூராகவும் 52 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்பொது நாடு பூராகவும் 380 லங்கா சதொச நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்தவருடத்தில் இந்த எண்ணிக்கையை 500 வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று கைத்தொ ழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிசார்ட் பதியுதின் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …