Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது! – பறிபோகிறது மேலும் சிலரின் பதவி

சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது! – பறிபோகிறது மேலும் சிலரின் பதவி

மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் சிலரின் பதவிகள் விரைவில் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கடந்த வியாழக்கிழமை மத்துகம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகேவின் பதவிகள் பறிக்கப்பட்டு குறித்த தொகுதிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அத்தனகல தொகுதியின் புதிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக பொது எதிரணிக்கு ஆதரவான அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மேலும் சில அமைப்பாளர்களின் பதவிகளை விரைவில் பறிப்பதற்கு சு.கவின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …