Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்

மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்

தாங்கள் தெரிவு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்றையதினம் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி வன்னி மாட்ட நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்திருந்த கேப்பாபுலவு மக்கள் தமது இரண்டு வார கால அவகாசத்தை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களுடைய போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு மென் போக்கான அழுத்தங்களை தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், குற்றம்சுமத்தியுள்ளார்.

கேப்பாபுலவு மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

தமக்கு அரசாங்க காணிகள் வேண்டாம் எனவும் அரசகாணிகளில் இராணுவத்தை குடியமர்த்திவிட்டு சொந்த காணிகளை வழங்குமாறு மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மக்களின் அழைப்பை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைாசா ரவிகரன், கந்தையா சிவனேசன் ஆகியோர் மாத்திரமே சென்றிருந்ததாகவும் ஏனைய உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் 42 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …