Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் முஸ்லிம் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு வெளியான செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் எவ்வாறு, எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஸ் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அத்துடன் குறித்த முச்சக்கர வண்டியை நீதிமன்றில் ஒப்படைக்காது, எவ்வாறு பொலிஸார் விடுவித்தனர், என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இதன்போது சட்டத்தரணி க.சுகாஸ் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதவான் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஸ் கோரினார். அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என கருதுவதனால் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸாரே தொடர்ந்தும் முன்னெடுப்பர் என நீதவான் தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …