விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் வைரல் ஹிட்டடித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும், தனக்கு நடிகர் சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ மிகவும் பிடிக்கும் எனவும் கூறியிருந்தார் ஷெரில். எனவே விரைவில் இவர் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில், அன்னா இருவரும் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று வெளியிடப்பட்ட ‘சொடக்கு’ பாடல் டீசரில் அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலின் டீசரில் நடித்திருப்பதன் மூலம் தனக்குப் பிடித்த நடிகரான சூர்யாவின் படத்தில் பங்கேற்றுவிட்டார் ஷெரில்.