Thursday , April 25 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகள், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அடுத்த 3 வாரங்களில் இலங்கை மிகமோசமான பின்விளைவுகளை சந்திக்க நோிடும்.

மேற்கண்டவாறு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அரசாங்கத்திடம் தான் அறிவித்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்தல், மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பும் நடவடிக்கை,

உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றால் 3 வாரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும். அப்படி தலை தூக்கினால் தேர்தல் மாத்திரமல்ல ஒன்றையும் செய்ய முடியாது. தேர்தல் நடவடிக்கையை

முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் சுகாதார அதிகாரி என்ற ரீதியில் அதற்கான வாய்ப்புகளையே நான் கூறினேன். முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என நான் கூற மாட்டேன். எனினும்

இதே முறையில் சென்றால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் என எனக்கு தெரியும். சில அரசியல்வாதிகள் அதை திறவுங்கள் இதை திறவுங்கள் என்று கூறுகின்றார்கள். எனினும் எங்கள் பணியை செய்ய விடுங்கள்.

நாங்கள் அவற்றினை சரியாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv