இரணைமடுக் குளத்தின் வாய்க்காலில் வீழ்ந்த நீர்ப்பாசன துருசுக் கதவு சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளரின் முயற்சியினால் கதவு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது – என விவசாயிகள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.
குளத்தின் இடதுகரை வாய்க்காலின் துருசுக் கதவுகள் இரண்டில் ஓர் கதவானது கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கழன்று வாய்க்காலுக்குள் வீழ்ந்தது. அவ்வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்செய்வதற்கு 15 நாள்களாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஒற்றைக் கதவின் மூலமே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரணைமடுக் குளம் பல ஆயிரம் மில்லியனில் சீரமைக்கப்பட்டது. இருந்தும் இதுபோன்ற சிறிய விடயங்களால் அதன் பயனைப் பெறமுடியாது போய்விடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
குளத்தின் சீரமைப்புக் கான ஒப்பந்த நிறுவனமே மேற்படி விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.எனினும், விவசாயிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மாவட்ட நீர்ப்பாச னப் பொறியியலாளர் தலையிட்டு கதவு சீர்செய்யப்பட்டுள்ளது. – எனத் தெரிவிக்கப்பட்டது.