ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!
இலங்கையில் கொரோனா அபாயம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றது.
மேற்படி தகவலை சற்று முன்னர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி 26ம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே அமுல்படுத்தப்படும்.
மேலும் 26ம் திகதி தொடக்கம் கொழும்பு, ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து இயல்புக்கு திரும்பவுள்ளது.
பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?