தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார்.
சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர்.
நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயிரத்து 500, ஆயிரத்து 600 அயிரத்து 50 மில்லி கிராம் அளவுள்ள கஞ்சா மீட்கப்பட்டது. அவர்கள் மூவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சுற்றி வளைப்பில் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து இரண்டு முறை தப்பித்துச் சென்ற சசிப்பு வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 15 லீற்றல் கசிப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.