Monday , November 18 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி

ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி

ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி

ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முட்டாளாக்க முடியாது :

உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ஏழைகளை இனியும் முட்டாள் ஆக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது. உ.பி., முழுவதும் மாற்றத்திற்கு ஆதரவான அலைகள் வீசுவதை என்னால் காண முடிகிறது.

ஓட்டுப்பதிவு துவங்கிய போது மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என சிலர் நம்பினர். ஆனால் 3 கட்ட தேர்தலுக்கு பிறகு அவர்களின் நிலையை புரிந்து கொண்டு, நம்பிக்கையை இழந்து விட்டனர். உ.பி.,க்கு சேவை செய்ய பா.ஜ.,வுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்.

ஒவ்வொரு அடியிலும் வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை அமைக்காமல் இருப்பது அவமானம். ஏழைகள், நடுத்தர மக்கள், நேர்மையானவர்கள் பக்கம் அரசு உள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றும் வகையிலான வளர்ச்சி நிறைந்த சூழலை பா.ஜ., ஏற்படுத்தும். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …