Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பாலைச் சோலை பிரதேசத்தில் பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் கடந்த 21ஆம் திகதி சிறுமியை தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …