Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளை மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …