ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!
நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும். இது வைத்தியர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறையின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் தேசிய அடையாள அட்டையுடன் இந்த சேவை கடிதம் கட்டாயமானது என்று தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில தரப்பினர் சட்டத்தையும் மீறி வெளியில் செல்வதால் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு
-
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
-
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
-
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!