மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்பதோடு, காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் வவுனியா நகரிற்கு வருகை தந்த மற்றும் வெளியேறிய வாகனங்களுக்கு தொற்று நீக்கும் வேலைதிட்டம் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது