கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு முன்னதாக கோவை மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் டானுக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்தது தெரியவந்ததையடுத்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டானின் இரத்த மாதிரிகளின் முடிவுகள் சென்னையில் இருந்து கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால் சிறுநீரக பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
-
யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
-
இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி
-
கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!
-
வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!
-
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா – 34 பேர் பாதிப்பு!
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு!
-
இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு
-
நல்லூர் முருகன் கோவில் மூடல்
-
கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு
-
கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!
-
கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!
-
யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை
-
இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு