ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு
ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம் வரை நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.