யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த அணி, இது நாட்டிற்கு அச்சுறுத்தலான விடயமென குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இலங்கை அரசை பிரதிநிதித்துப்படுத்தியே கொன்சியூலர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில், நாட்டிற்குள் கொன்சியூலர் அலுவலகத்தை அமைத்தமை விதிமுறைகளை மீறும் செயலென தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச் செயற்பாட்டின் மூலம் வெளிவிவகார ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை வடக்கில் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் அது நாட்டிற்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.