Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும்?

இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும்?

சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதிதான் தியன்கொங்-1 சீன விண்வெளி நிலையம் என்கிற விண்கலன். 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்புகின்ற திட்டத்தின் மாதிரியாக தியன்கொங்-1 விண்கலன் இருந்தது.

2011 ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 ஆண்டுகால பணிகளை நிறைவேற்றிய பின்னர், பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது கட்டுப்படுத்த படாமல் உள்ளதால், எங்கு, எப்போது விழும் என்று கணிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் இன்று பூமியில் விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கணக்குப்படி நேற்று இந்த விண்வெளி நிலையம் பூமியில் மோதியிருக்க வேண்டும். ஆனால் காலநிலை மாறுபாடு காரணமாக இதன் வேகம் குறைந்து இருக்கிறது.

விண்வெளி நிலையத்தின் 80% கடல்பகுதியில் விழலாம் என்றும் சில சமயங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் கூட விழலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv