தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ‘ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, …
Read More »தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்: சமகால அரசியல் குறித்து விவாதம்
தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கூடியுள்ளது. ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், எஸ்.சிறிதரன், துரைசிங்கம், எஸ்.சுமந்;திரன், எஸ்.சிறிநேசன், …
Read More »பேச்சுவார்த்தைக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அரசிடம் பகிரங்க வேண்டுகோள்
எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 69ஆவது றாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த தாயொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், …
Read More »வென்றது ஹர்த்தால் போராட்டம்! – கிடைக்குமா உறவுகளுக்கு நீதி?
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. இதனால் தாயக தேசம் முழுவதும் நேற்று முற்றாக முடங்கியது. மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழர் தாயக தேசம் ஓரணியில் ஒருமித்து நேற்று முடங்கியது. நேற்றைய போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தமது முழுமையான தார்மீக பேராதரவை வழங்கியிருந்தன. ஹர்த்தால் போராட்டம் …
Read More »பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்தால் மக்களின் மனநிலை உக்கிரமடையும்: சி.வி.
பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த …
Read More »இந்தியாவிலிருந்து 46 அகதிகள் தாயகம் திரும்பினர்
இந்தியாவின் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46 பேர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், குறித்த அகதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா ஆகிய …
Read More »தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய …
Read More »மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை
மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண …
Read More »முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி …
Read More »வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!
வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள் அரசியல் கட்சிகள் * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி * தமிழர் விடுதலைக் கூட்டணி * ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் * அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் * புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அமைப்புக்கள் * வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் * மட்டக்களப்பு சிவில் சமூகம் * அம்பாறை முஸ்லிம்கள் …
Read More »